The Mirage

Niveditha, 27 Mar, 2017
0
0

The English translation is available below

மெய்

அவள்.
சாதனை பெண் அல்ல
பள்ளிப் படிப்பும்
கல்லூரி படிப்பும்
ஏட்டு சுரக்காயாய்.
உடல் சார்ந்த சுயம் பதின் பருவத்தில்.
பாட்டும் புத்திசாலத்தனமும்
மதர்ப்பான முலையிலும்
உருண்டு திரண்ட ஸ்தனத்திலும் காணாமல் போனது.
மீண்டும் மீண்டும் உடல் சார்ந்த அவதானங்கள்
அவர்கள் கண்களும் வார்த்தைகளும்
கக்கும் அத்துமீரல்கள்.
கவுரமானவை சில
அசிங்கமானவை பல
அத்துமீரல் என அறியா
அவள் நிலை.
சமுதாயத்தின் தந்திரம்
கள்ளம்.
வாழ்வில் இலக்கு ஏதுமற்ற
சராசரி இருத்தல்.
“பூமிக்கு பாரமில்லாமல் வாழ்தல் வேண்டும்
நான்கு பேருக்கு உபயோகமாய் வாழ்தல் வேண்டும்.”
எங்கோ படித்த வரிகள் மட்டும்
மனதில் ரீங்காரமிட்டபடி.
அவள்.
திருமணம் ;தந்திரத்தின்
வீரியமான துருப்பு சீட்டு
மணமுடித்து பிள்ளைகள்
பெற்று புதிதாய் தன்னை
உருவாக்கிய மாய எண்ணத்தில்
அவள்.
அவளுள் புதைந்து இருந்தன
பல்வேறு திறமைகள்.
நீளமான கயிரால் பிணைக்கபட்டு
சுதந்திரம் என்கிற பிரமை கொண்டு
எட்டி போனால் கழுத்து இறுக்க படும் அபாயம்
அலுப்பும், மெய் என பொய்யாய்
இதுவும் புதியன என மீண்டும்
மாய வலையில்
அவள்.
அவளுள் சின்னதாய் படபடக்கும் உயிர் பறவை
விட்டு விடுதலையாக துடித்தது.
முயர்ச்சிகள் பல
வலிபட்டு உதிரம் சிந்தி
அவள் -உடல் இல்லை
அவள் -உறவு இல்லை
அவள் வற்றா அன்பின் ஊற்று
தினம் ஒரு பாடம்
தினம் ஒரு புரிதல்
தினம் அவள்
தந்திரமற்று உண்மை ஊற்றாய்.
ஆயிரம் ஆயிரம் மடல் தினம் விறிய
இன்று மறித்து
நாளை உயிர்த்து
அவள் :நான் .
நான் உனை தீண்ட
நீ நானய் அவளாய்.
சாதனை பெண்ணா அவள்?
எல்லா விதமான வன்முறைக்கு ஆட்பட்டும்
மீண்டும் மீண்டும்
பூக்கும் அவள்
தடாகத்தில் பூக்கும் தாமரையாய்
பாலைவன சப்பாத்தி கள்ளி பூவாய்
சாலையோர காட்டு பூவாய்
அவள் சாதனை படைத்தவள்
மீண்டும்மீண்டும் தன்னை
புதிதாய் உருவாக்குபவள்.
இவள் நான் .
நிவேதிதா என்கிற புற நான்.
நிச்சலனமான என் அகநான்.
என் கதை புதியது அல்ல.
உன் அல்லல் எனதாய்
என் தீர்வுகள் நாளை உனதாய்.
பயணம் மட்டுமே உண்மையாய்.

 

The Mirage

She
Is not a woman with extraordinary accomplishments
School and college were mere bookish knowledge to her

When she came of age to become aware of her body
All the people around her impressed upon her
Her concept of ‘self’ as one centered on the body
Her talents in music and her intelligence were shadowed
Got lost by other’s sight on her luster
And the fully endowed growth of her woman’s body

Again and again she experienced references to her body
Their eyes and words were spiteful fires of inner violations
Many were vulgar and some were sophisticated and polished
She was still in a state of innocence
Not knowing that these were inner trespasses
She lived within the society’s clever and cunning façade

She existed in a goalless ordinary state of living
Only few words that she had read somewhere
‘We should live without any burden to the earth
Our life should be useful to a few people’
Rang within her heart as some propelling guidance might

She fell into marriage, the society’s most potent trump card
Living with her partner and bearing children
With a new sense of her being, that she created
She still lived in a mirage, and not in her true self
All her talents and potentials still lay deeply buried within her

She lived with a long rope firmly tied
Bearing a illusion of freedom within her mind
She could spread her wings and fly only thus far
Before there was the danger of the rope choking her throat
This fatigue was true and yet unreal
This too was a new experience, she felt
And yet she was again caught in the mysterious web of life

Within her heart there was this tiny living bird that fluttered
Pulsing with the heartbeat to break free and fly
The efforts were plenty and galore
So were the struggles, pain and heart-bleedings too

She – is not her body
She – is not her relationships
She is the fountain of ever present and abundant love
Everyday she lives a new learning
Everyday she touches a fresh insight
Everyday she is a fountain of innocent truth

Thousands and thousands of petals flower within her daily
Dying today and born anew tomorrow
She is ‘me’ or She am I
Now I am touching you, connecting within you
You too will become ‘me’ one day
Do you think she is an accomplished woman?

Although all kinds of violence, restrictions and limitations
Are imposed and showered on her
Again and again she is the one who flowers
She is the lotus that flowers in the dirty pond
She is the desert flower that blossoms in the parched desert

She has many accomplishments on her stride
Again and again she recreates her self newly
She is ‘me’, Niveditha is my external name and self
Ripple free, I am my Inner Self
Vast, free, creative and ever new

My story is not new
My troubles and challenges are mine to bear
My resolutions and insights are yours for tomorrow
This journey alone is the truth.

Translation by Arul Dev, with inputs from Author

Author

Niveditha

I was the home pruned – made to look pretty flower.
I am the healer who has healed herself and is healing others with love and compassion. I am the Other.
I am a therapist who uses theatre arts to rehabilitate people with special needs.

 


 

0
0

Share Your Thoughts